Close
நவம்பர் 21, 2024 6:20 காலை

ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்தில் என்ன தான் சிக்கல்?

80 – களின் தொடக்கம். மதுரையில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியில் ஆடை அலங்கார போட்டி நடப்பதாக கூறியிருந்தார்கள்.

அப்போது பல மாணவிகள் ஆர்வமுடன் அந்த போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் அணிந்த உடை எல்லாம் சினிமா நடிகைகளை பின்பற்றி அமைந்திருந்தது. சில மாணவிகள் அணிந்திருந்த உடை கவர்ச்சியாகவும் இருந்தது. இதில் சிறந்த ஆடை அணிந்த மாணவியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்.  காரணம் அவர் மட்டும் தான் முழுமையாக சேலை அணிந்து கலந்து கொண்டார்.

அந்த பெண் வேறு யாரும் இல்லை. மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் மகள். அந்த கடை விளம்பரம் செய்யும் போது ஜவுளிக்கடை என்பதில் கடை என்பதை அடித்து விட்டு கடல் என்று போடுவார்கள். இப்போதைய சரவணா ஸ்டோர் போல அப்போது மதுரையில் பிரபலமான ஜவுளி கடை.

அந்த பெண்ணின் சகோதரியை தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார். இவை காதல் திருமணங்கள் அல்ல. பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணங்கள்.

இந்த பின்னணியிலிருந்து வந்த பெண்கள் எப்படி இந்த  முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் ஏ ஆர் ரகுமான் மீது பெரிய அளவில் எந்த விமர்சனமும் வந்தது இல்லை. சுமூகமான திருமண வாழ்க்கையின் பலனாகத்தான் தான் இரண்டு மகள்கள், ஒரு மகனை பெற்றெடுத்துள்ளனர்.

அவர் இந்த மண்ணை நேசிப்பவர். இந்த மொழியை நேசிப்பவர் தனது மத நம்பிக்கையை பிறரிடம் வற்புறுத்தாதவர். உழைப்பதில் சலிக்காதவர். பணத்துக்கும் புகழுக்கும் பஞ்சமில்லை.

இருந்தும் திருமண வாழ்க்கை 30 வருடத்திற்குள் முறிந்து விட்டதை பார்க்கும்போது எல்லாவற்றையும் மீறி மனிதர்கள் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top