Close
நவம்பர் 24, 2024 2:15 காலை

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதி மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த நிகழ்வினை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு கூட்டத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:-

தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் 1991 ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது 50 ஆயிரம் ரூபாய் ஆக இருந்த உதவித்தொகையினை தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் 1844 பயிற்சி வகுப்புகள் மூலம் 98245 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கீட்டின்படி 2022-23 ஆண்டில் இந்தியாவில் 1849492 தொழிலாளர்கள் உள்ளனர். அதில் முதலிடம் தமிழகத்திற்கு ஏறக்குறைய 15% தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அதுபோல் பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆவார்கள்.

மேலும் தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் முயற்சியினால் இந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகையின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருந்தது எனவும், தொழிலாளர்கள் உயிர் விலை மதிக்க முடியாதது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்/

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீரராகவ ராவ் , தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் எஸ்.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் மு.வே.செந்தில்குமார்,  அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top