Close
நவம்பர் 24, 2024 3:15 காலை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடி மக்களுக்கான சிறப்பு முகாம்

சிங்காடிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தேசிய தொல்குடி பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாமில் முனிவர் ஒருவர் கோரிக்கை மனு அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் இன்று  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினரிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள். இம்முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை, சுகாதார துறை, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஆகிய துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் ஊராட்சியில் தேசிய தொல்கொடி பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாமில் ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும் பழங்குடியினர் மக்களுக்கு அடிப்படை வசதிகளான ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டைகள், நலவாரிய அட்டைகள் போன்றவை மனுக்களாக பெறப்பட்டன. தொடர்ந்து பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

இம்முகாமினை தொடர்ந்து சிங்காடிகாவாக்கம் ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இம்முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top