Close
நவம்பர் 21, 2024 5:14 மணி

குழந்தை நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டுகோள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதி முறைகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவில் தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே உள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நலகுழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெறுதல் குழந்தைகளுக்கான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். (அல்லது)
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல்நலம் அல்லது கல்வி அல்லது மனிதமேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்படும் நாளில் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெறலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் தகுதிவாய்ந்த பதவிக்கு பொருத்தமான பதவிக்கு கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெற விண்ணப்பிக்கலாம்.

இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்துறை,
எண்.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 600010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் .கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top