Close
நவம்பர் 21, 2024 7:56 மணி

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. தலைமை ஆசிரியை மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி 15 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது.  இப்பள்ளியில் வழக்கம்போல் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தலைமை ஆசிரியர் விஜியலட்சுமி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதனைப் பார்த்த தலைமை ஆசிரியர் விஜியலட்சுமி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

உடனடியாக சக ஆசிரியர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நலமுடன் உள்ளார்.

அரசு பள்ளியின் அணைத்து கட்டங்களின் உறுதித்தன்மையை மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை உறுதிபடுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top