விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொலை, கொள்ளை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ராஜ்குமார் மீது 9 கொலை வழக்குகளும், அரூபன் மீது 4 கொலை வழக்குகளும் உள்ளன. மேலும் பல குற்ற வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த நிலையில், இருவருக்கிடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில் தங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் திருந்தி வாழப் போவதாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.