செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். அலாரம் அடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்று முதல் மாடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கம்பியை அறுத்து எடுத்து வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் வங்கியின் மேலாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசார் கொள்ளையன் உள்ளே இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து செங்குன்றம் போலீசார் லாவகமாக கொள்ளையனை வங்கியில் இருந்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை வீராபுரத்தை சேர்ந்த சுரேஷ் 45 என்பது தெரியவந்தது. தொடர்ந்து கொள்ளையன் வேறு எங்கெல்லாம் இதே போன்ற கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் அலாரம் அடித்ததால் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் தப்பி உள்ளது. வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையடித்த முயன்ற சம்பவம் செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.