தேனி வட்டார போக்குவரத்து அலுவலக (RTO) ஊழலைக்கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் புகை பரிசோதனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். வண்டி ஓட்டிக்காட்டமலேயே வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து ஆணையாளர் ஆய்வு செய்திட வேண்டும். பொதுமக்கள் சிரமத்திற்கு காரணமாக இருக்கின்ற குண்டும் குழியுமாக உள்ள RTO வளாக சாலையை செப்பணிட வேண்டும். பயிற்சி பள்ளி அல்லாத இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பொதுமக்களிடம் அதிகமாக வசூல் செய்வதை தடுத்திட தமிழக அரசும் போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் போன்ற வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி UCPI தேனி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் வெள்ளைப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.எம்.எஸ் .அபுதாஹிர் மற்றும் நிர்வாகிகள் வீரையா, வீ.முல்லை முருகன் சுப்பிரமணி, பெரியகுளம் துரைக்கண்ணன் போடி.எஸ்.ராஜா, கோவிந்தராஜ், RSP ராஜதுரை மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஹஜ்முகமது தேவாரம் பொன்னுச்சாமி செல்லப்பாண்டி, மீசைபாண்டி ஆட்டோபாண்டி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர். மாவட்டச்செயலாளர் பெத்தாட்சி ஆசாத் நிறைவாக பேசினார்.