Close
நவம்பர் 23, 2024 1:54 மணி

10வது முறையாக விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு : கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்..!

ஏகனாபுரம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் பார்வையாளராக வந்த ஒன்றிய அலுவலக இளநிலை பொறியாளர் கயல்விழியிடம் கிராம பொதுமக்கள் சரமாரியான கேள்விகள் கேட்டபோது.

நிரந்தர கிராம ஊராட்சி செயலர் எங்கே ? அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எங்கே* ? அனைத்து திட்டங்களையும் தடுக்க நீங்கள் யார் ? என அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய கிராம சபை கூட்ட அரசு பெண் அதிகாரி .

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஏகனாபுரம் கிராம ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக வளர்ச்சி இளநிலை பொறியாளர் கயல்விழி பார்வையாளராக கலந்து கொண்டார்.

ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் காலதாமதமாக வந்த அரசு அதிகாரியை அப்பகுதி மக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தை கேட்டபோது வாகனம் பழுதடைந்ததால் கால தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டு அதன் பின் பொதுமக்கள் அவரை கேள்வி கேட்க துவங்கிய முதல் முடியும் வரை அதிகாரி ஒரு பதிலும் கூற முடியாமல் திணறினார்.

ஏகனாபுரம் கிராம ஊராட்சிக்கு நிரந்தர கிராம ஊராட்சி செயலர் எப்போது நியமிக்கப்படுவார் ?

கிராம வளர்ச்சிக்கு கொண்டு வந்த அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிறுத்த நீங்கள் தான் காரணம் எனவும் அதற்கு நீங்கள் எதற்கு தடை விதித்தீர்கள் ?

விமான நிலைய திட்டம் முழுமை அடைந்து விட்டதா ?

எனத் தொடர்ந்து பல கேள்விகளை பொதுமக்கள் கேட்டதால் அதிகாரி பதில் கூற முடியாமல் திணறிய காட்சி அதிர்ச்சி அளித்தது.

இதுகுறித்து இறுதியாக அதிகாரி விளக்கிய போது, பணியிடங்கள் காலியாக உள்ளதால் இரண்டு கிராம ஊராட்சிகளுக்கு பணியாளர்களை சில பகுதிகளில் நியமித்து உள்ளதாகவும் அரசு விரைவில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திட்டங்களை ஒருபோதும் அதிகாரிகள் தடுக்கவில்லை, மாவட்ட அதிகாரிகள் செயல்படுத்துவதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று சமாதானம் கூறியது அப்பகுதியில் அதிர்ச்சி அளித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top