Close
நவம்பர் 23, 2024 4:34 மணி

வேலூரில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை:  நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது61). முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த 2022-ம் ஆண்டு 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி 7 மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (22.11.2024) வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது சிறுமை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரர் சேகருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top