Close
ஏப்ரல் 3, 2025 3:20 காலை

சாமி சிலை அகற்றம்.. போலீஸ் குவிப்பால் பரபரப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகில், அரசு நிலத்திற்கு சொந்தமான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாமி சிலை ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வருவாய்த்துறையினர் தற்போது அந்த சிலையையும், பொன்னியம்மன் கோவிலுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரையும் அகற்றி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பாதுகாப்பு பணிக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top