திருவாரூர் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் வருகையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிக்க உள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மேலும் குடியரசு தலைவர் ஹெலிகாப்டரில் வருவதால் இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
குடியரசு தலைவர் இறங்கும் தளம் மற்றும் தங்குமிடம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.