Close
நவம்பர் 23, 2024 3:15 மணி

பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வரணும்..! 25ம் தேதி நாமக்கல்லில் முழு கடையடைப்பு..!

கோப்பு படம்

நாமக்கல்,
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வரவேண்டும் என்பதை வலியுறத்தி நாமக்கல்லில் வரும் 25ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் கடந்த 10ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன.

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் துறையூர், திருச்சி மற்றும் மோகனூர் செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல வேண்டும் என வலியுறத்தி, வரும் 25ம் தேதி, திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நாமக்கல் நகரில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைபு அழைப்பு விடுத்துள்ளது.

இதையொட்டி நாமக்கல் நகர அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி, மாநில இணை செயலாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகருக்குள் வந்து செல்லும் அனைத்து பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்.

பழயை பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்லாத காரணத்தால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், பஸ் நிலைய கடை வியாபாரிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள முதலைப்பட்டி வரை வந்து செல்லும் பஸ்களுக்கு, ஏற்கனவே இருந்த தூரத்தை விட 7 கி.மீ குறைவதால், பஸ் கட்டணத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஐயத்தை போக்கிடும் வகையில், தற்போது உள்ள பழைய ஸ்டாண்டு தொடர்ந்து டவுன் பஸ் ஸ்டாண்டாக நிரந்தரமாக செயல்படும் என்கிற உறுதியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அளிக்க வேண்டும்.

புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் – பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நாளை 25ம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு நாமக்கல் நகர ஹோட்டல்கள், பேக்கரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம், மளிகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்,

ஆட்டோமொபைல் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வணிகர் சங்ங்கள் ஆதவு தெரிவித்தனர். மருந்து வணிகர் சங்கத்தினர், தங்களது மருந்து கடைகளை வரும் 25ம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாக உறுதியளித்தனர். கூட்டத்தின் முடிவில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top