Close
நவம்பர் 23, 2024 6:00 மணி

போதை பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது. 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட தீபா மற்றும் மணி

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் தமிழக முதல்வர் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பள்ளி கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் கடைகளை சோதனையிட்டு  விதிகளை மீறி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழக அரசாங்க தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை தொடர்க கண்காணிப்பில் இருந்த நிலையில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்தும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட கைலாஷ்.

ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொழிற்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஒரகடம் பகுதியில் கைலாஷ் என்பவரது வணிக கடையில் 34 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தீபா என்ற பெண்மணி ஐந்து கிலோ எடையுள்ள பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்து அதனை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மணி என்பவர் தனது வணிக கடையில்  ஆறு கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

ஒரே நாளில் மூன்று காவல் நிலைய எல்லைகளில் சுமார் 45 கிலோ எடையுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 70 ஆயிரம் என தெரிய வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top