Close
மே 21, 2025 6:39 மணி

வயநாடு இடைத்தேர்தல் பிரியங்கா காந்தி வெற்றி : காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்..!

வயநாடு இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்டில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய போது எடுத்த படம்

வயநாடு இடைத் தேர்தல் பிரியங்கா காந்தி வெற்றி : தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார்.  இவரது வெற்றியை கொண்டாடும் வகையில் தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் காந்தி சிலை முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ஐ என்டியூசி மாநில பொதுச் செயலாளர் வைகுண்ட ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி பூமாதேவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம்,
துணைத் தலைவர் தேவராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரபிக், நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top