Close
நவம்பர் 24, 2024 4:37 காலை

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி : பாஜகவினர் கொண்டாட்டம்..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி... தென்காசியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பாஜகவினர் கொண்டாட்டம்..

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தென்காசி மாவட்டத்தில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடும் மைந்தனர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகாராஷ்டிராவில் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது

இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாதி கூட்டணியும் களமிறங்கின.

ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

இதனை அக்கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜகவின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top