அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கமிட்டியின் தமிழக தலைவர் ACS ஹரிஹரன் குருசாமி தலைமை வகித்தார்.. ஐய்யப்பா சேவா சங்க தலைவர் அழகிரி குருசாமி முன்னிலை வகித்தார்.. செயலாளர் மாடசாமி ஜோதிடர் வரவேற்றார்.
தென்காசி செங்கோட்டை பாவூர் பகுதி குருசாமிகள் கலந்து கொண்டார்கள்.. புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட கண்ணன் நன்றி கூறினார்.. வரும் 15-12-24 ஞாயிறு அன்று திருஆபரணபெட்டி வரும்போது சிறப்பாக வரவேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யபட்டது. அதற்க்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தலைவர் விளக்கினார்.
பின்பு பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று பின் சென்ற வருடம் போல திருஆபரணபெட்டி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யபட்டது.பின் கீழ் கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
1. அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டியின் முதல் கோரிக்கையின் படி சபரிமலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை என்று வசதி ஏற்படுத்தி கொடுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் திரு பிரசாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
2, முறையாக ஒரு மண்டலம் விரதம் இருந்து பெருவழி பாதையில் வரும் சாமிமார்களுக்கு கரிமலை மேலே டோக்கன் வழங்கபட்டு அவர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம் போர்டிர்க்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
3, சபரிமலை தேவசம் பரிசீலித்து கொண்டு இருக்கும் 18ம் படி ஏறியதும் கொடிமரம் வழியாக நேரடியாக சுவாமி தரிசனம் செய்யும் திட்டத்தை பெரிதும் வரவேற்றும் அவசியம் அதை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.