Close
நவம்பர் 25, 2024 6:57 காலை

குற்றாலம் மலைப்பகுதியில் டிரக்கிங் சென்ற மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்..!

குற்றாலம் மலைப் பகுதியில் ட்ரக்கிங் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரை படத்தில் காணலாம்

குற்றாலம் மலை பகுதியில் உள்ள செண்பகாதேவி அருவிக்கு ட்ரெக்கிங் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்

தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தின் கீழ் குற்றாலம் வனச்சரகம் செண்பகாதேவி அருவி வரை ட்ரெக்கிங் சென்றுவர ஆன்லைனில் முன்பதிவு செய்து தினமும் சுற்றுலா பயணிகள் ட்ரெக்கிங் சென்று வரும் நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  குற்றாலம் செண்பக தேவி அருவிக்கு டிரெக்கிங் மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாருடன் இணைந்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு அரசு அதிகாரிகள் உட்பட 25 பேர் ட்ரெக்கிங்கில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகள் மத்தியில் தமிழ்நாடு மலையற்ற திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகப்படியான மக்களை ட்ரெக்கிங்கில் ஈடுபடுத்த இந்த முன்னெடுப்பு நடைபெற்றதாகவும்.

குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் உடல் நலனில் அக்கரை கொண்டு ஆர்வத்துடன் ட்ராக்கிங்கில் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top