தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் புத்தகத்திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் திருவிழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் பேசுகையில்:
3வது பொதிகை புத்தகத்திருவிழாவின் நிறைவு நாள் விழா நிகழ்ச்சியாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், எழுத்தாளர் வீரசோழன் இலச்கிய சுரேஷ் பிரதீப் அவர்களின் இலக்கிய வாசிப்பு என்ன செய்யும் ? என்ற தலைப்பில் சிறப்புரை,
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் இலக்கிய விமர்சனமும், சமூக விமர்சனமும் என்ற தலைப்பில் சிறப்புரை, எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்கள் நான் ஒரு வாசகன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் 9-வது நாள் வரை புத்தகத்திருவிழாவில் 70,078 பள்ளி மாணவ, மாணவிகளும், 14,377 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,52,571 பொதுமக்களும் என மொத்தம் 2,37,023 நபர்கள் புத்தகங்களை வாங்கி உள்ளனர்.
(15.11.2024) முதல் (23.11.2024) வரை ஒன்பது நாட்கள் ரூ.86,79,999/- (ரூபாய் எண்பத்தாறு இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது மட்டும்) மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்தெரிவித்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் புத்தகததிருவிழாவில் அதிக அளவில் புத்தகங்களை வாங்கிய கீழப்புலியூர் வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசாக ரூ.15,000/-, ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000/- மற்றும் ஆவுடையானூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5000/- வழங்கினார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிக அளவில் புத்தகங்களை வாங்கிய 10 பள்ளிகளுக்கு தலா ரூ.3000/- வழங்கப்பட்டது. வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 200 அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இப்புத்தகத்திருவிழாவில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செல்லம்மாள் பாரதி, ரசிகமணி டி.கே.சி, தேவநேயப்பாவாணர், சாகித்ய அகாடமி விருதாளர்கள் சமுத்திரம், மாதவன், .மா.லெ.தங்கப்பா, கவிஞர்.விக்கிரமாதித்யன்,கலாப்ரியா, கழனியூரன் உள்ளிட்ட 48 எழுத்தாளர்களின் சிறுகதைகளும், கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தி மலராக வெளியிடப்பட்டது.
இதில் பல இளம்படைப்பாளர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.