வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் உத்திரமேரூர் வட்ட தலைவர் திருவேங்கடம் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் சபீர், வட்ட செயலாளர் பெருமாள், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
அதில், கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், D – கிரேடு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்த வேண்டும், கிராம உதவி உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக வேலை வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மேலும் மாலை 6 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.