Close
மே 20, 2025 4:43 மணி

சங்கரன்கோவில் பள்ளி அருகே தேங்கும் சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி அருகே தேங்கி கிடக்கும் சாக்கடையால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழ நீலிதநல்லூரில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியைச் சுற்றி செல்லும் வாறுகாலானது பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது.

பள்ளி அருகே சாக்கடை தேங்கி இருப்பதை காணலாம்

இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் இதன் மூலம் உற்பத்தியாகும் கொசுக்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்  உள்ளது என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளியை சுற்றி உள்ளவாறு சுத்தம் செய்து அங்கு படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top