Close
நவம்பர் 26, 2024 8:54 காலை

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்..!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம்

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’ என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுத்தியுள்ளார்.

டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

‘மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். இயற்கைச் சீற்றங்களால் தொடர் பாதிப்புகளை சந்திக்கும்
விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ம் ஆண்டு முதல் விவசாயிகளாகிய நாங்கள் போராடி வருகிறோம்.

போராட்டம் தொடரும்

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (SKM NP) சார்பில் டெல்லியை நோக்கிப் பேரணி புறப்பட்டோம். ஹரியானா மாநில எல்லைப்பகுதி சாலைகளில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு, சாலையின் குறுக்கே கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. இப்படியாக விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனாலும் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.பல விவசாயிகள் போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்கள்.பல விவசாயிகள் கொல்லப்பட்டார்கள். அதையெல்லாம் மீறி விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே 10 மாதங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து சாலையிலேயே போராட்டம் நடந்து வருகிறது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் நிர்ணய சட்டம்

விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு தடை ஏற்படுத்தும் அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப்சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது.

அந்தக்குழு விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு கடந்த நவ.,22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்தக்குழு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் விவசாய வேளாண் உற்பத்திப்பொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்’ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top