Close
நவம்பர் 26, 2024 10:31 காலை

பொது கலந்தாய்வு இடமாறுதல் : மாறுதல் ஆணைகள் வழங்கிய அமைச்சர்..!

உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் முன்னிலையில் நடந்த கல்தாய்வு இட மாறுதல்

மதுரை.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோ.வி. செழியன், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் உயர்கல்வி துறையின், அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியல் கல்லூரி அரசியல் பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இடம் மாறுதலை தொடங்கி வைத்து மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார்.

உயர் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. கே.கோபால் , தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் , கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top