Close
மே 20, 2025 12:18 காலை

காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது.

தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாள் -காஞ்சி தெற்கு ஒன்றியத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கி கொண்டாட்டப்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை ஒன்றிய செயலாளர் குமணன் மற்றும் நிர்வாகிகள் வழங்கிய போது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட குருவிமலை மற்றும் ஐயங்கார் குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் காஞ்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையில் பிரம்மாண்ட கழக இருவண்ண கொடி ஏற்றி ,பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்,500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு அறுசுவை காலை உணவு வழங்கப்பட்ட போது

இதில் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top