சேலம்:
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூம்புகார் சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
சேலம் வள்ளுவர் சிலை அருகே உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு தீபத் திருவிழா சிறப்பு கண்காட்சியினை நவம்பர் 25 முதல் டிசம்பர் 14 வரை நடத்துகிறது.
சேலம் மாவட்ட துணை காவல் ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிருந்தா திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில், அனைத்து வகையான விளக்குகளும் இடம் பெற்றுள்ளன.
கும்பகோணம் நாச்சியார் கோவில், மதுரை, வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட அரை அடி முதல் 6 அடி வரையில் அன்னம் மற்றும் பிரபை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவைகள் சுமார் ரூ 3 முதல் ரூ.55 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
சேலம் மாநகர மக்கள் கார்த்திகை பண்டிகையை கொண்டாடுவதோடு இந்த விளக்குகளை வாங்கி, விளக்குகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடுமாறு மேலாளர் நரேந்திரபோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.