சேலம்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 3வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருக்கும் அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை இந்த போராட்டத்தின் மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில துணைத் தலைவர் அர்த்தணாரி தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டனர்.