Close
ஏப்ரல் 2, 2025 8:42 மணி

மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்பரேட்டர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

சென்னை

திருவொற்றியூரில் புயல் மழைக்கு 4 பேர் பலி

வேலூர்:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ஊராட்சியில், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) பம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (55) என்பவருடன் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்ப கம்பத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது,  மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிழந்தனர்.

இருவரின் உடல்களையும் வேப்பங்குப்பம் காவல்துறையினர் மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top