செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(29ம் தேதி) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கில் நகர்ந்து தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று (28ம் தேதி) மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (28ம் தேதி ) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (29ம் தேதி) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 2ம் தேதி வரை கனமழை நீடிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.