திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் உமராபாத் பள்ளி தெரு பகுதியை சேர்ந்த போஸ் என்பவருடைய தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இன்று வழக்கம்போல பணிக்குச் சென்ற கட்டிடம் கட்டும் மேஸ்திரி வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியைச் சேர்ந்த முனிசாமி மகன் சரவணன் வயது (32) பணியின்போது கட்டிடத்தில் அருகே உள்ள மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.