Close
நவம்பர் 28, 2024 1:47 மணி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2025ம் ஆண்டுக்கான அபிசேக முன்பதிவு டிச. 1ல் துவக்கம்..!

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல்:

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிசேக முன்பதிவு வருகிற டிச. 1ம் தேதி முதல் துவங்குகிறது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி காலை 9 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம்நடைபெறும்.

பின்னர், காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வடைமாலை சாத்துபடி அலங்காரம் மற்றும் அபிசேகம் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

கட்டளைதாரர்கள் மூலம் நடைபெறும், இந்த அபிசேகத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அடுத்து ஆண்டிற்கான அபிசேக முன்பதிவு துவக்கப்படும். 2025ம் ஆண்டிற்கான முன்பதிவு வருகிற டிச. 1ம் தேதி முதல் கோயில் அலுவலகத்தில் துவங்கும்.

ஒரு நாளில் தலா ரூ. 7 ஆயிரம் வீதம் கட்டணம் செலுத்தி 6 பேர் அபிசேகத்திற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது ஒருவரே ரூ. 42 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழு அபிசேகத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து முழு கட்டணத்தையும் செலுத்தி, அபிசேகத்திற்கு தங்களுக்கு விருப்பமான தேதியை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு, 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று, கோயில் செயல் அலுவலரும், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top