Close
நவம்பர் 28, 2024 4:56 மணி

ஆட்சியர் குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் கேள்வி குறி ?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் கழிவறையிலிருந்து பெரும் கழிவுகள் அனைத்தும் கால்வாய்களில் விடப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழும் பகுதி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும்நிலையில்,  இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தது.

இதில் இப்பகுதி மட்டுமலலாமல் சுற்றுப்பகுதியாக காந்திநகர் , எல்லப்பா நகர் , நேரு நகர் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த அரசு பள்ளிகளில் படிக்க வைத்த வருகின்றனர்.

தற்போது இந்த அரசு  நடுநிலைப் பள்ளியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியருக்கு கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் வெளியேறும் கழிவுநீர் செப்டிக் டேங்க் மூலம் இல்லாமல் நேரடியாக கால்வாய்களில் விடப்படுவதால் கால்வாய் ஒட்டி உள்ள வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இங்கு நிலவும் சுகாதார சீர்கேடுகளை களைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மேலாண்மை குழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்து கழிவறைகளை மேம்படுத்தவும் அதில் இருந்து வெளியேறும் நீரை டேங்க் அல்லது பாதாள சாக்கடை இணைப்புகள் அளித்து சுகாதார நிலவ உதவிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

ஆனால் மாதங்கள் உருண்டோடியும் இது குறித்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில் மழை நீர் கால்வாயில் கழிவறை கழிவுகள் அனைத்தும் செல்லும் நிலையில் சுகாதாரத் சீர்கேடுகள் நிலவி மாணவ மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top