Close
டிசம்பர் 4, 2024 6:55 மணி

காஞ்சி கதிர்வேல் தெருவில் எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் மின்கம்பம்..! தொட்டுவிடும் தூரத்தில் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு பகுதியான கதிர்வேல் தெருவில் எலும்பு கூடாய் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் சிமெண்ட் மின் கம்பம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரில் சுங்குவார்சத்திரம் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பொறியியல் கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

இதில் உள்ளூர் மக்கள் இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குடும்பத்துடன்  தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு புதிய காஞ்சிபுரம் விரிவாக்க பகுதிகளும் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்திற்கான தேவைகளும் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்களே தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுதல் மின் இணைப்புகள் அதில் அளிக்கப்படும் நிலையில் அதன் தரம் மற்றும் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு பகுதியான கதிர்வேல் தெருவில் எலும்பு கூடாய் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் சிமெண்ட் மின் கம்பம்.

ஆனால் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் பழுதான கம்பங்களை உடனடியாக அலுவலகங்களுக்கு தெரிவித்து புதிய மின்கம்பங்கள் பெற்று பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியது கடமையை என்பதை மறந்து விடுகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த கதிர்வேல் தெருவில் மின்கம்பம் பழுதடைந்து எலும்பு கூடாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் ஒரு மாதங்களில் கூடுதலான மழை மற்றும் காற்று உள்ளிட்டவைகளால் சேதம் அடைந்து முறிந்து விழுந்தால் பெரும் அபாயம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக அதனை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top