Close
டிசம்பர் 4, 2024 7:36 மணி

விருதுநகர் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்..!

உதயநிதி பிறந்தநாளையொட்டி நடந்த அன்னதானம்

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா : அன்னதானம் – நலத்திட்ட உதவிகள் :

காரியாபட்டி:

வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில்,, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா காரியாபட்டி ஒன்றியத்தில் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி தி.மு.க இளைஞரணி சார்பில் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

கல்குறிச்சி, தொட்டியங்குளம், ஆவியூர் , கம்பா ளி வலுக்க லொட்டி , வரலொட்டி , காரியாபட்டி பேரூராட்சி மல்லாங்கிணறு பேரூராட்சி ஆகிய ஊர்களில் பள்ளி மாணவர் களுக்கு அன்னதானம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், காரியாபட்டி உதவும் கரங்கள் நிறுவனத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம், காரியாபட்டி பேரூராட்சி சிறுவர் பூங்காவில் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் ஒன்றிய ச் செயலாளர்கள் கண்ணன். செல்லம், பேரூராட்சித் தலைவர்கள் செந்தில்,
துளசி தாஸ், மல்லாங்கினர் நகர செ யலாளர் முருகேசன் , மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் ,
மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்டப் பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி , மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டி, ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி, மாவட்ட மாணவர அணி அமைப்பாளர் கருப்பு ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரசகுளம் சேகர் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top