சேலத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகிய இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
சேலத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகிய இளைஞர்கள் 20 பேர் அ.முபாரக் தலைமையில், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சேலம் மாவட்ட தலைவர் அ.அலாவுதீன் பாஷா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
காங்கிரஸ் சிறுபான்மை துறை சேலம் மாவட்ட தலைவர் அ.அலாவுதீன் பாஷா இவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் காதர் பாஷா, மாவட்ட துணை தலைவர்கள் முஹம்மது ஜாவீத், சைக்கிள் பாஷா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார் அஹமது, தவ்சீப் கான், அம்மாபேட்டை மண்டல தலைவர் முபாரக், சூரமங்கலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் கயர் அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டனர்.