அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் மற்றும் மாணவரணி திமுக சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை துண்டு அணிவித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதாமணிமாறன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், காயத்ரி இதயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, அலங்காநல்லூர் பேரூராட்சி துணை சேர்மன்சுவாமிநாதன், தொழிலதிபர் கண்ணன், மோகன், டாக்டர் கோகுல்கோவிந்தராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, ஒப்பந்ததாரர் பரந்தாமன், மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, யோகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 10 பேர் கொண்ட குழு வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் கேடயம் மற்றும் ரொக்க பணம் அண்டா முதல் கட்டில் பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விளையாட்டு குழு மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.