காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது..
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், அதி காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பதிவுகளான ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
இந்த புயல் கரையை கடக்கும் வரை அத்தியாவசிய தேவைகள் என்று பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்ததால் சாலைகளில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வீசும் அதிக காற்றால் சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அனைத்தும் சாய்ந்து பல்வேறு பகுதியில் சிக்னல் விளக்குகள் கீழே விழுந்தும் சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுர மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காஞ்சிபுரத்தில் 15 மில்லி மீட்டரும் உத்திரமேரூரில் 15 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 20 மில்லி மீட்டரும் ஸ்ரீபெரும்புதூரில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 33 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 65 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து தற்போது அதிகரித்து வருகிறது.
ஏரியின் நீர்மட்டமான 24 அடியில் தற்போது 18.6 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர் மழையை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 21 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.