Close
ஏப்ரல் 3, 2025 12:30 மணி

ஆத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் ஜனநாயக ரீதியில் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறையை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் அப்சர் அலி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா வரவேற்புரை ஆற்றினார். கட்சியின் மாவட்டச் பொதுச் செயலாளர் பிலால் தொகுப்புரையாற்றினார்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா, மாவட்ட துணை தலைவர் சையது அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் விக்காயத்துல்லா மாவட்ட துணைத் தலைவர் தரவேஸ் மைதீன், கிழக்கு மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன், கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக், தெற்கு தொகுதி தலைவர் சேட்டு, வீரபாண்டிய தொகுதி பொறுப்பாளர் பக்கூர், மருத்துவ அணியின் பொறுப்பாளர் முகமத் ஹனிபா மற்றும் கெங்கவல்லி தொகுதி செயளாலர் அப்துல் அஜீம் மற்றும் கட்சியின் செல்வீர்கள் ஜமாதார்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில், ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் அப்துல் கனி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top