பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே அதி கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு தேங்கி நிற்கும் மழை நீரினை அகற்றும் பணியில் காலை முதலே மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஹாஸ்பிடல் சாலையில் கனமழை காரணமாக நீர் சாலையில் வெள்ளம் போல் செல்லும் நிலையில் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடனே அப்பகுதியை கடக்கின்றனர்.
குறிப்பாக மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகே அதிக அளவில் நீர் தேங்கும் நிலையில் அதனை அகற்றும் பணிகள் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியின் போது கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்ற எந்த ஒரு உபகரணங்களும் இன்றி கைகளாலே அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதங்களில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுகளை அகற்றிய நிலையில் தற்போது இந்த மழைக்கு மீண்டும் கழிவுகள் சிக்கி நீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.