Close
டிசம்பர் 5, 2024 2:07 காலை

என்ன ஆச்சு.. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக தானியங்கி வானிலை நிலையத்துக்கு..?

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தானியங்கி வானிலை மையம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையம் புதர் மண்டி கிடக்கும் இருப்பதால் வானிலை நிலவரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா?

இந்திய வானிலை ஆய்வு துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காஞ்சிபுரத்தில் நிலவும் வானிலை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்நிலையும் அமைந்துள்ள பகுதி முழுவதும் புதர்மண்டி காடு போல காட்சியளிக்கிறது.

மேலும் அதற்கான கருவிகளை சூழ்ந்து குடிகள் மரங்கள் என அடைத்து கொண்டு உள்ள காட்சியும் காண முடிகிறது

இதனால் காஞ்சிபுரத்தில் நிலவும் வானிலை தகவல்கள் சரியாக இருக்குமா என்பதும் ? அதை பராமரிக்க தவறியதால் வானிலை நிலவரம் முழுமையாக பெற முடிகிறதா என பல கேள்விகள் எழுந்து வருகிறது.

தற்போது பருவமழை மற்றும் புயல் உள்ளிட்ட நிலைகள் காணப்படுவதால் வானிலை நிலவரம் முக்கியம் என்பதை கவனிக்க மறந்தது ஏனோ என்ற கேள்வியும் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களிடையே எழுந்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top