Close
ஏப்ரல் 4, 2025 11:32 காலை

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலோசன் மேல்நிலைப்பள்ளி மாணவிள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலோசன் மேல்நிலைப்பள்ளி மாணவரர்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பப் பேரவையுடன் இணைந்து பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவரர்கள் கலந்துகொண்டு தங்கள் அறிவியல் செய்முறைகளை காட்சிப்படுத்தினர். அதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலோசன் மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஜனனி மற்றும் அஸ்விதா இணைந்து “போர்முனையில் இராணுவத் தளவாடங்களை சுமந்துசெல்லும் தானியங்கி ரோபோ” என்ற தங்கள் செய்முறையை காட்சிப்படுத்தினர்.

இவர்களது இந்தக் கண்டுபடிப்புக்கு மாவட்ட அவளில் இரண்டாம் பரிசு கிடைத்தது. அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி நினைவுப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.  பள்ளியின் இயக்குநர் சுதர்சன் மற்றும் பள்ளியின் துணைமுதல்வர் எஸ்.குமாரவேல் ஆகியோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top