Close
டிசம்பர் 5, 2024 2:44 காலை

லண்டனில் என்ன படித்தார் அண்ணாமலை?

தமிழ் நாடு பாஜ தலைவர் அண்ணாமலை -கோப்பு படம்

லண்டனில் பயிற்சி முடித்து தமிழகம் திரும்பி விட்டார் அண்ணாமலை. அண்ணாமலை லண்டனில் என்ன பயிற்சி பெற்றார் என்பது யாருக்கும் தெரியாது. சர்வதேச அரசியல் பற்றிய படிப்பு என்பதோடு ஊடகங்கள் முடித்துகொள்கின்றன. அண்ணாமலையும் அதை சொல்லவில்லை. சொல்வார் என எதிர்பார்க்கவும் முடியாது.

இம்மாதிரியான படிப்புகள் பயிற்சிகள் அவருக்கு புதிதல்ல. இதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல பயிற்சிகளை பெற்றிருந்தார். இதனை ஆழமாக கவனித்தால் அவர் தமிழக அரசியலுக்கு தயார் செய்யப்படுவதாக தெரியவில்லை.

தமிழக முதல்வர் பதவிக்கு ஒருவர் தயார் செய்யப்பட்டால் அவருக்கு அரசியல் பின்புலம், சினிமா பின்புலம் மட்டும் இருந்தால் போதும். வாய்கிழிய பேச்சு வேண்டும் எது நடக்காதோ அதையெல்லாம் பேசி பேசி மக்களை கவர தெரிந்தால் போதும்.
உண்மையில் அண்ணாமலை தேசிய அளவில் தயார் செய்யப்படுகின்றார்,

அடுத்த 10 ஆண்டுகளில் இப்போது இருக்கும் பாஜக தலைவர்கள் ஓய்வினை எட்டும் போது அடுத்த தலைமுறை மிகப்படித்த தலைமுறையாக உலகளவில் அமெரிக்கா போல பெரும் படிப்பும் ஞானமும் கொண்ட இளைய தலைமுறையால் நிரப்பப்பட வேண்டும் என பாஜக விரும்புகின்றது. அதற்கு அண்ணாமலையினை தயார் செய்கின்றார்கள்.

ராஜாஜி, காமராஜருக்கு பின் சக்திவாய்ந்த தமிழன் அரசியலில் உருவாகவில்லை. அண்ணாமலை அழைத்து செல்லப்படும் பாதையினை கண்டால் பலமிக்க அரசியல்வாதியாக தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழனாக அவரை உருவாக்குகின்றார்கள்.

அந்நாள் வரும்வரை தமிழகத்தில் அவரை நின்று ஆட அனுமதித்திருக்கின்றார்கள். அது ஒரு பயிற்சியாகவும் இருக்கும், கட்சிக்கும் அவருக்கும் நல்லது. ஆனால் அவரை எப்போது தேசிய அரசியலுக்கு இழுத்து இங்கு களத்தினை காலியாக்குவர்கள் என்பது தமிழிசை, பொன்னார், வானதி மற்றும் கேசவ விநாயகம் போன்றோரின் கவலையாக உள்ளது.

நிச்சயம் அவர்கள் விரும்புவது விரைவில் நடக்காது. அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் பயிற்சி கொடுத்து தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top