Close
டிசம்பர் 4, 2024 7:22 மணி

கும்மிடிப்பூண்டியில் மழை நின்றும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு..!

கும்மிடிப்பூண்டி ஜி.என். செட்டி சாலையில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை நின்ற போதிலும் மூன்றாவது நாளாக மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி யின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமரை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு வெளியேறும் உபரநீரானத பிரித்திவி நகர் வழியாக உபரி நீர் கால்வாய் மூலம் ஏனாதி மேல்பாக்கம் ஏரியை சென்றடைகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தாமரை ஏரியின் உபரிநீர் கால்வாய் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜி.என்.டி சாலை அருகே மழைநீர் வடிகால்வாய்கள் நிரம்பி ஜி என் டி சாலையில் மூன்றாவது நாளாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கழிவுநீருடன் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்தக் கழிவு நீர் ஜிஎன்டி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் தொற்றுப் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஜிஎன்டி சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த வழியை கடக்க முடியாமல் தற்போது பெரும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் கார்,பைக்,ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே தண்ணீரில் மூழ்கி இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகி நிற்கும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

மழைநீர் ஆனது முற்றிலுமாக வடிந்தால் தான் சாலையின் போக்குவரத்து சீராகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்க பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்க வைத்து மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டும் விதை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மழை காலம் வந்துவிட்டால் இந்த பகுதியில் இதே பிரச்சனை தொடர்கதை ஆகுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top