மதுரை.
சாலை விடுதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நாளுக்கு நாள் பெருகி வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சாலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உத்தரவு பேரில், சந்திப்பில் காவல்துறை உதவி ஆய்வாளர் சந்தானகுமார் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இதில், குறிப்பாக, அனைவரும் கட்டாயம் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் எனவும்,பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயமாக இரு சக்கர வாகனமும் மற்ற நான்கு சக்கர வாகனமும் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது எனவும் சாலை விதிகளை மதித்து வாகனங்கள் ஓட்ட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துணை ஆய்வாளர் சந்தானகுமார் மற்றும் காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார்.