விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலகத்தில் 100 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சுழி வைத்திலிங்க நாடார் அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் 100 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். நூலகர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிச் செயலாளர் பெரியண்ணராஜன் மற்றும் பள்ளி அலுவலர்கள் செய்திருந்தனர்.