Close
டிசம்பர் 5, 2024 2:16 காலை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகள்- கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெஞ்சன் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று மழை பொழிவின் போதும் தேவையான மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

 இந்த ஆய்வில் கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதி, மழைநீர் வரத்து வாய்க்கால் மற்றும் மழைநீர் வெளியேறும் பகுதி போன்ற பகுதிகள் பார்வையிட்டு, மழைநீர் தங்குதடையின்றி வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரிஷிவந்தியம் கடைவீதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் பார்வையிடப்பட்டு மழைநீர் வெளியேற்றும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனமழை மீட்புப் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மழைநீரினை உடனுக்குடன் வெளியேற்றிடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் வெளியேறும் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மேலும், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு உளுந்தூர்பேட்டை கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்றுள்ள புகார் மனுக்கள் விவரம், புகார் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் விவரம், நீர் நிரம்பியுள்ள ஏரிகள் விவரம், நிவாரண முகாம்கள் விவரம் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் விவரம், வீடு மற்றும் கால்நடைகள் சேத விவரம், நிவாரண உதவிகள் வழங்கிய விவரம் மற்றும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்புப் பணிகள் விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வெளிப்புற வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, மழைநீரை முழுவதுமாக வெளியேற்றும் வழிமுறைகள் குறித்து அலுவலர்களுடன்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், என்.பில்ராம்பட்டு சேஷசமுத்திரம் ஆற்றில் கனமழை காரணமாக தரைப்பாலம் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மழை பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை சேதத்திற்கான நிவாரண உதவிகளை 24 மணி நேரத்திற்குள் உடனுக்குடன் வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலும் அனைத்துத் துறை

அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மழை பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின்பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top