Close
டிசம்பர் 5, 2024 2:35 காலை

காஞ்சிபுரத்தில் புயலில் சேதமான சாலைகள் செப்பனிடும் பணி தீவிரம்.!

காஞ்சிபுரத்தில் மழைவிட்டிருக்கும் நிலையில் சாலைகள் செப்பனிடும் பணிகள் நடந்துவருகின்றன.

பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபாத் உத்திரமேரூர் குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அதிக கன மழை பெய்து நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி வருகிறது.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் இன்று மழை ஓய்ந்த நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடம் சாலை, தாமல்வார் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு , காஞ்சிபுரம் வந்தவாசி சாலை பல பகுதிகளில் ஜேசிபி உதவியுடன் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் விபத்து இன்றி செல்லும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாநில சாலையோர மழை நீர் வடிகால் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளையும் தொடர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top