தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது.
தேனி நகர தலைவர் சிவராமன்ஜீ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிறுவனத்தலைவர் பொன்.ரவி வழிநடத்தினார்.
தீர்மானம் :1
வங்கதேசத்தில் 26.11.2024 அன்று வங்கதேச அரசால் அங்குள்ள இஸ்கான் கோவிலின் தலைமைத் துறவி ஸ்ரீ சின்மயி கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டதை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரை உடனடியாக நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் எனவும், காரணம் இன்றி இந்துமதத்தலைவர்களையும் குருமார்களையும் கைது செய்வதை வங்கதேச அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு வங்க தேச அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கோரிக்கையாக வைக்கிறது.
தீர்மானம்: 2
தற்போது தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை மேற்கொண்டு மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்:3
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த இந்து போராளிகளான பலிதானிகள் வீரத்திரு.ஆறுமுகம் மற்றும் வீரத்திரு. வரதன் நினைவு தினத்தில் அவர்களுக்கு வீரவணக்கத்தை இந்து எழுச்சி முன்னணி உரித்தாக்குகிறது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.