Close
டிசம்பர் 5, 2024 2:15 காலை

மதுரையில் வினாடி வினா போட்டி : வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு..!

வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மதுரை:

மதுரை காளவாசலில், உள்ள பி.எம்.எஸ்.ஒ.ஐஏஎஸ் பயிற்சி இயக்கத்தின் சார்பாக வினாடி வினா திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிகளில் மாணவிகள் பலர் சிறந்த திறனை கொண்டிருந்தனர். இந்த போட்டி பொது அறிவை வளர்ப்பதுடன் கூர்ந்த சிந்தையை வளர்ப்பதுடன் படுக்கும் மாணவர்களுக்கு மன ஒருமுகப்படுத்தும் திறன் வளரும்.

இந்த வினாடி வினா போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேராசிரியர் சண்முகவேல் அட்வகேட் தலைமையில் இக்னோ மண்டல இயக்குனர் சண்முகம் மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முடிவில், இயக்கத்தின் செயலாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top