சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு,பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை துவக்கி வைத்து, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் நன்கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்-2024-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில், விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, வாகனங்களில் விழிப்புணர்வு வாசக ஒட்டு வில்லைகளை ஒட்டி துவக்கி வைத்து, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கூறும்போது ,
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது எய்ட்ஸ் மற்றும் அதை ஏற்படுத்தும் வைரஸ், எச்.ஐ.சி. பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கும் நோக்கத்துடன், உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், எய்ட்ஸால் இழந்த உயிர்களை நினைவு கூறவும், வாழ்பவர்களுக்கு ஆதரவு காட்டவும் போன்ற நிகழ்வுகளும் அந்நாளில் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, இன்றையதினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக்கருத்து “சரியான பாதையை தேர்ந்தெடுங்கள்” – சமூகங்களுடன் இணைந்து எச்.ஐ.வி உள்ளோரின் மனித உரிமைகளை மதித்து 2030-ல் எய்ட்ஸை முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதாகும். உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதன் நோக்கம், எச்.ஐ.வி. பாதிப்பால் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் சரிநிகராக வாழ்ந்திட வேண்டும்.
அவர்களுக்கு மனதளவில் எந்த இடர்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதே ஆகும். அந்தவகையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் பெற்று, ஒவ்வொருவரும் சிறப்புடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அந்நிகழ்வின் போது, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே எய்ட்ஸ் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மருத்துவக் கல்லூரியை சார்ந்த ஆய்வக நுட்பன மாணவர்கள், ரோஸ்லின் சமுதாய கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் வாகனங்களில் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர், தொடங்கி வைத்த பேரணியானது,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சமுதாயக்கூடத்தில் நிறைவு பெற்றது.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கிடையே நடைபெற்ற விழிப்புணர்வு சுவரொட்டி (Poster Making) போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிந்து வரும் நன்
கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற ‘சமபந்தி போஜனம்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு உணவருந்தினார். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , மாவட்ட சுகாதார
அலுவலர் மரு.எஸ்.மீனாட்சி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.வெள்ளைச்சாமி, நிலைய மருத்துவ அலுவலர் (மருத்துவக்கல்லூரி) மரு.மனோகரன்,
மாவட்ட திட்ட மேலாளர் க.நாகராஜன், மாவட்ட மேற்பார்வையாளர் வாருணிதேவி, மருத்துவ அலுவலர் (ART கூட்டு மருந்து சிகிச்சை மையம்) மரு.வெற்றிசெல்வி உட்பட மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கப்பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.