Close
டிசம்பர் 5, 2024 1:45 காலை

காஞ்சிபுரத்தில் ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்து : ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்..!

லாரி மோதி பழுதடைந்த ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே பணியாளர்கள்

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள கேட் மீது லாரி மோதிய விபத்தில் காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக செல்கிறது.

கோயில் நகரமென கூறப்படும் காஞ்சிபுரம் மாநகரில் புதிய ரயில்வே நிலையம் அருகே காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் அமைந்துள்ளது எல்.சி 28 ரயில்வே கேட்.

இப்பகுதியில் காலை 8.10 மணியளவில் அவ்வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று கடக்க முயன்ற போது தடுப்பு கேட் மீது மோதியபோது கேட் அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி மீது கேட் கம்பி உரசி விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ரயில்கள் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

காலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை பீச் செல்லும் விரைவு ரயில் மற்றும் திருப்பதி டு பாண்டிச்சேரி செல்லும் ரயில்கள் அனைத்தும் காலதாமதமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில்வே பணியாளர்களின் துரித நடவடிக்கைகள் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

ஒரு மணி நேர ரயில் தாமதத்தால் சென்னை அரசு , தனியார் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் மாணவர்கள் பிற பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.

பலர் தங்களது ரயில் பயணத்தை விட்டு விட்டு பேருந்து பயணத்திற்கு நடை பயணமாக பேருந்து சாரை சாரையாக சென்றனர்.

ரயில் போக்குவரத்து சற்று சீரான நிலையில் மீண்டும் பணியாளர்கள் முழுமையாக பணியை மேற்கொள்ள ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top